Breaking News

6/recent/ticker-posts

அயோத்தி கோவிலுக்கு ராம நவமி பிரசாதமாக 1,11,111 கிலோ லட்டு

அயோத்தில் பாலராமர் சிலை கடந்த ஜனவரி மாதம் 22&ந்தேதி பிராணபிரதிஷ்டை செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்த அயோத்தி ராமர்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அயோத்தில் உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் வருகிற 17&ந்தேதி ராமநவமி வருகிறது. இதையொட்டி அயோத்தி ராமர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ராமநவமி அன்று அயோத்தியில் சாமி தரிசனம் செய்ய திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ராமநவமி அன்று அயோத்தி வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 1,11,111 கிலோ லட்டுகள் அனுப்பு வைக்கப்பட உள்ளது. இதனை தேவ்ராஹா ஹன்ஸ் பாபா அறக்கட்டளையின் அறங்காவலர் அதுல் குமார் சக்சேனா தெரிவித்து உள்ளார்.


இதுபற்றி அதுல் குமார் சக்சேனா கூறும் போது, ஒவ்வொரு வாரமும் காசி விஸ்வநாதர் கோவில், திருப்பதி பாலாஜி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்கு லட்டு பிரசாதம் அனுப்பப்படுகிறது.அயோத்தியில் ராமர் பிராண பிரதிஷ்டை தினமான ஜனவரி 22&ந்தேதி அன்று 40,000 கிலோ லட்டுகளை பிரசாதமாக அனுப்பி இருந்தோம் என்றார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்