இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது.ஹமாசுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த சிரியா, லெபனானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுத உதவி வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பிராந்தியத்தில் தொடர்ந்து போர் பதட்டம் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதவடில் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் புரட்சிப்படையை சேர்ந்த மூத்த தளபதி உள்பட மொத்தம் 13 பேர் பலியானார்கள். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதட்டம் ஏற்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரக கடலில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த “எம்எஸ்சி ஏரீஸ்” என்ற சரக்கு கப்பலை ஈரான் வீரர்கள் இன்று திடீரென சிறைபிடித்தனர். ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கப்பலுக்குள் இறங்கி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த சரக்கு கப்பலில் 17 இந்தியர்கள் உள்பட 25 பேர் குழுவினர் உள்ளனர். தற்போது அந்த சரக்கு கப்பல் ஈரான் கடற்பகுதி நோக்கி சென்று கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பல் போர்ச்சீகல் நாட்டை சேர்ந்தது ஆகும். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்டு இந்தியா நோக்கி கப்பல் வந்ததாக கூறப்படுகிறது. இஸ்ரேலுடன் தொடர்புடையதால் அந்த சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்துள்ளாபக தெரிகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதட்டம்
அதிகரித்துள்ளது.
சரக்கு கப்பல் சிறைபிடிக்கப்பட்டதற்கு பின்னர் இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, பிராந்தியத்தில் பதட்டத்தை அதிகரித்து இருப்பதற்கு எதிராக கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சரக்கு கப்பலுடன் 17 இந்தியர்கள் சிறைபிடிக்கப்பட்டு இருப்து குறித்து இந்திய அதிகாரிகள் கூறும்போது,“எம்எஸ்சி ஏரீஸ்’ என்ற சரக்குக் கப்பலை ஈரான் கைப்பற்றியிருப்பது தெரியவந்து உள்ளது. அதில் 17 இந்தியர்கள் உள்ளனர். தெஹ்ரானிலும், ஈரானிய அதிகாரிகளையும் தூதரக வழிகளில் தொடர்பு கொண்டுள்ளோம் என்றனர்.
0 கருத்துகள்