மோனிசா என் மோனாலிசா என்ற படத்தில் அறிமுகமானவர் கவர்ச்சி நடிகை மும்தாஜ்.குஷி படத்தில் விஜய்யிடம் கட்டிப்புடி கட்டிப்புடிடா.. கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா என்ற பாடல் மூலம் மேலும் பிரபலமானார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த அவர் திடீரென சினிமாவில் இருந்து ஒதுக்கினார்.
இந்த நிலையில் மும்தாஜ் தனது வாழ்க்கை குறித்து பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது:-
எனக்கு உடலில் திடீரென வலி வந்தது.இரண்டு வருடங்கள் அந்த வலியை அனுபவித்தேன். பின்னர் ஆஸ்பத்திரியில் எடுத்த பரிசோதனையில் Auto immune நோய் இருப்பது தெரிந்தது.உடலை அசைத்தாலே வழி எடுக்கும். இதற்காக தினமும் மருந்து மாத்திரைஎடுத்துக்கொள்கிறேன்.
மனஅழுத்தத்தில் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். ஏன் அழுகிறேன் என்றே தெரியாது,ஒரு நாள் தொடர்ந்து இரண்டரை மணி நேரம் அழுதுக்கொண்டே இருந்தேன். ஏன் என்று இது வரை எனக்கு தெரியவில்லை.
மனஅழுத்தத்தை புரிந்து கொண்டு என்னை அதில் இருந்து மீட்டது என் அண்ணன்,என் குடும்பம் மற்றும் அல்லாதான். அவர்கள் மட்டும் இல்லாமல் இருந்து இருந்தால் நான் தற்கொலை செய்து கொண்டு இருப்பேன். கவர்ச்சியாக நடித்தது குறித்து இப்போது வருத்தப்படுகிறேன். ரசிகர்கள் என் கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் பரப்ப வேண்டாம். எனக்குஇனிமேல்திருமணமாகும் என்கிற நம்பிக்கை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
0 கருத்துகள்