ஐபிஎல் போட்டியில் இன்று பெங்களூர்-ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய ஹைதராபாத் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இதனால் மைதானம் முழுவதும் சிக்சர், பவுண்டரிகளாக பறந்தன.ஹெட் அதிரடியாக விளையாடி 102 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அவர் 8 சிக்சர்கள், 9ண பவுண்டரிகள் அடித்து இருந்தார். இதன் பின்னர் களம் இறங்கிய கிளாஸசன் தனது அதிரடி பேட்டிங்கை தொடர்ந்தார். அவர் 31 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார்.
இதேபோல் மார்க்ரம்17 பதில் 32 ரன்கள்,அப்துல் சமத் 10 பந்தில் 37 ரன்கள், அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 34 ரன்கள் குவித்தனர். இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இது இந்த ஐபிஎல் சீசனில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும் இதை தொடர்ந்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களம் இறங்கியது.
அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய விராட் கோலி,டூப்ளிசஸ் நீண்ட நேரம் நிலைத்து நிற்கவில்லை. கோலி 20 பந்தில் 42 ரன்கள், டூப்ளிசஸ் 28 பந்தில் 62 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள்.
இதன் பின்னர் வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடாததால் பெங்களூர் அணி தடுமாறியது. கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி வான வேடிக்கை காண்பித்தார். சிக்சர்களாக பறந்தன. இதனால் பெங்களூர் மைதானத்தில் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
தினேஷ் கார்த்திக் 18.4 வது ஓவரில் 35 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் வரலாற்றில் இரண்டு அணிகளும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக 549 ரன்கள் குவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்