மும்பை பந்தரா பகுதியில் நடிகர் சல்மான் கான் வீடு உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் துப்பாக்கியால் 4 முறை சுட்டனர். இதில் சல்மான் கானின் வீட்டு சுற்றில் குண்டு பாய்ந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சல்மான்கான் வீட்டில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 2 பேர் குஜராத்தின் பூஜ் பகுதியில் கைது செய்யப்பட்டு மும்பை குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பீகாரை சேர்ந்த விக்கிகுப்தா(24), சாகர் பால்(21) என்பது தெரிந்தது.அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
0 கருத்துகள்