உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் பிப்ரைச் பகுதியை சேர்ந்தவர் ராம் கோவிந்த். இவரது மனைவி சுமன் தேவி (35). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
ராம் கோவிந்த் கூலி வேலை பார்த்து வந்தார். இதனால் குறைந்த அளவே வருமானம் கிடைத்தது குடும்பம் நடத்துவதிலும் மிகவும் கஷ்டப்பட்டார். எனினும் அவர் மனைவி மற்றும் குழந்தைகளை நன்கு கவனித்து வந்தார்.
இதற்கிடையே சுமன் தேவிக்கும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த 7 ஆண்டுகளாக கள்ள தொடர்பு இருந்து வந்தது. ஆனால் இதனை அறியாமல் ராம் கோவிந்த் இருந்தார். நாளடைவில் அவர்களது கள்ளக்காதல் மிகவும் இறுக்கமானது.
காதலன் மூலம் தனது குடும்பத்தை நடத்த பணத்தை பெற்றார். இதனால் காதலனை தனது வீட்டிலேயே தங்க வைத்துக் கொள்ள சுமன் தேவி முடிவு செய்தார். இந்த யோசனையை அவர் கணவர் ராம் கோவிந்த்திடம் சொன்னபோது நிராகரித்தார்.மேலும் கள்ளக்காதலை கைவிட மனைவியை வற்புறுத்தினார்.
இதற்கு மேல் கள்ளக்காதலனை பிரிந்து தனிமையில் வாழ முடியாது என்று முடிவுக்கு வந்த சுமன் தேவி காதலனை தனது வீட்டிலேயே வைத்துக் கொள்ள திட்டமிட்டார். இதையடுத்து சுமன் தேவி அப்பகுதியில் உள்ள உயர் அழுத்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது ஏறி தற்கொலை செய்யப் போவதாக கூச்சலிட்டபடி மிரட்டல் விடுத்தார். கள்ளக்காதலன் தனது வீட்டிலேயே தங்க கணவர் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர் உடனடியாக அந்தப் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மேலும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி நின்ற சுமன் தேவியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர் கள்ளக்காதலனை வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி இறங்க மறுத்தார்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி சுமன் தேவியை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர். மேலும் அவருக்கு அறிவுரைகள் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்காதலனை வீட்டில் தங்க வைப்பது தொடர்பாக கணவர் ராம் கோவிந்திடம் சுமன் தேவி பேசி இருப்பதும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராம்கோவிந் வீட்டை விட்டு வெளியேறியதும் தெரிந்தது.
தற்போது தற்கொலைக்கு முயன்ற சுமன் தேவி இதற்கு முன்பும் அதே பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதே போல் அவர் ரெயில் தண்டவாளத்தில் தற்கொலைக்கு முயன்ற போது மீட்கப்பட்டுள்ளார். சுமன் தேவி 3 குழந்தைகளுக்கு தாய் என்பதால் இந்த விவகாரத்தை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் போலீசார் கையை பிசைந்து படி உள்ளனர்.
காதலனும் வீட்டில் இருக்க வேண்டும் என கணவனை வற்புறுத்தி 3 குழந்தைகளின் தாய் டிரான்ஸ்பார்மரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமன் தேவி டிரான்ஸ்பார்மரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
0 கருத்துகள்