கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
கச்சத்தீவு பிரச்னையில் உண்மையில் என்ன நடந்தது என்று 27-1-2015 அன்று இந்திய அரசு தந்த கடிதம் தெளிவுபடுத்தியள்ளது.
அன்று பிரதமராக இருந்தவர் நரேந்திர மோடி.அன்று வெளியறவுத் துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர் ஜெய்சங்கர்.
அந்த 27-1-2015 ஆம் நாள் கடிதத்தைப் பற்றிக் கேட்டால், பா ஜ க.தலைவர்கள் ஏன் நெளிகிறார்கள், நழுவுகிறார்கள்?
கச்சத்தீவு பற்றி உண்மைக்குப் புறம்பான காட்டமான அறிக்கைகளை வெளியிடும் பா.ஜ.க. தலைவர்களுக்கு இலங்கையில் வாழும் 25 லட்சம் இலங்கைத் தமிழர்கள் மற்றும் 10 லட்சம் இந்தியத் தமிழர்களைப் பற்றிக் கவலையில்லை போலத் தெரிகிறது
உங்கள் காட்டத்தை இலங்கையின் மீது காட்டி 35 லட்சம் தமிழர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி் விடாதீர்கள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
0 கருத்துகள்