Breaking News

6/recent/ticker-posts

ரெயிலில் ரூ.4 கோடி பிடிபட்டது குறித்து தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னையில் இருந்து நெல்லை நோக்கி கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. அந்த ரெயிலை தாம்பரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்  சோதனை செய்தனர். 

அப்போது ஏ.சி. பெட்டியில் பயணம் செய்த பா.ஜனதா பிரமுகர் உள்ளிட்ட 3 பேரிடம் கட்டு கட்டாக ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.  அந்த பணம் நெல்லை தொகுதி பா.ஜ.க.வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.இது தொடர்பாக தேர்தல் சிறப்பு குழு மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ரூ.4 கோடி பிடிபட்டது குறித்து நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்டது குறித்து, வருமான வரித்துறை இதுவரை எந்த தகவலும் அளிக்கவில்லை. பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது திமுக அளித்த புகார் பற்றி விசாரணை நடந்து வருகிறது.ரூ.10 லட்சத்திற்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டால், வருமான வரித்துறை தான் விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்