Breaking News

6/recent/ticker-posts

டெல்லியில் கிராமத்துக்குள் புகுந்து 5 பேரை கடித்து குதறிய சிறுத்தை

 வடக்கு டெல்லி,வசிராபாத் பகுதியில் யமுனையை ஒட்டி ஜகத்பூர் கிராமம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 6.15 மணியளவில் எங்கிருந்தோ வந்த சிறுத்தை ஒன்று திடீரென ஊருக்குள் புகுந்து அங்கும் இங்கும் ஓடியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராமமக்கள் சிறுத்தையை விரட்ட முயன்றனர்.
 


 இதனால் ஆவேசம்அடைந்த சிறுத்தைப்புலி கிராமமக்கள் 5 பேர் மீது பாய்ந்து  கடித்து குதறியது. பின்னர் கிராமமக்களிடம் இருந்து தப்பிய சிறுத்தை அங்குள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர். 

மேலும் கிராமமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கிராமக்கள் அறைக்குள் புகுந்த சிறுத்தையை கதவை பூட்டி சிறைவைத்தனர்.

இதுபற்றி போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து வீட்டில் சிக்கிய சிறுத்தையை சுமார் 5 மணி நேரம் போராட்டத்துக்கு பின்னர் பிடித்தனர். இதனால் கிராமமக்கள் நிம்மதி அடைந்தனர். சிறுத்தை தாக்கியதில் பலத்த காயம்அடைந்த 5 பேரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்