Breaking News

6/recent/ticker-posts

கிணற்றில் விழுந்த பூனையை காப்பாற்ற முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சோகம்

மகாராஷ்டிரா மாநிலம், நெவாசா தாலுகா வகாடி பகுதியில் பாழைடந்த கிணறு உள்ளது.அதில் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தன. நேற்று மாலை அந்த கிணற்றுக்குள் பூனை ஒன்று வழி தவறி வழுந்தது. உயிருக்கு போராடிய பூனையை கண்டதும் அதனை காப்பாற்ற நினைத்த அருகில் வசிக்கும் ஒரே குடும்பத்தினர் முயன்றனர். அப்போது ஒருவர் கிணற்றுக்குள் இறங்கியபோது விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிணற்றின் மேல் நின்ற  மேலும் 4 பேர் ஒருவர் பின் ஒருவராக இறங்கி ஒருவரை ஒருவர் காப்பாற்றிக்கொள்ள முயன்றனர்.
இதில் அவர்கள் 5 பேரும் அடுத்தடுத்து விஷவாயு தாக்கி கிணற்றுக்குள் விழுந்தனர். இதனை கண்ட மேலும் ஒருவர் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினார். அவரும் இந்த விஷவாயுவில் சிக்கினார். கயிறு கட்டியதால் அவர் கிணற்றுக்குள் விழாமல் தப்பினார். மற்ற  5 பேரும் கிணற்றுக்குள் இருந்த சகதியில் சிக்கி பலியானார்கள்.


மீட்பு குழுவினர் 5 மணி நேரத்திற்கும் மேலாக போராடி பலியான 5 பேரின் உடல்களையும் வெளியே கொண்டு வந்தனர். முன்னதாக கிணற்றில் இருந்த சகதிகளை உறிஞ்சி வெளியே படுக்க மாநகராட்சியின் லாரிகள் பயன்படுத்தப்பட்டது. இதனால் மீட்பு பணி நேற்று நள்ளிரவு 12.30 மணி வரை நடந்து உள்ளது. முதல் உடல் இரவு 11 மணியளவில் தான் எடுக்கப்பட்டது. இதன்பின்னர் 4 உடல்களும் அடுத்தடுத்து மீட்கப்பட்டு உள்ளன.

விசாரணையில் பலியானவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த மாணிக் காலே (65), அவரது மகன் சந்தீப் (36), அனில் காலே (53),அவரது மகன் பப்லு (28) மற்றும் பாபாசாகேப் கெய்க்வாட் (36) என அடையாளம் காணப்பட்டுள்ளது.உயிருடன் மீட்கப்பட்டவர் பலியான மாணிக்காலேயின் இளைய மகன் விஜய்மானிக் காலே என்பது தெரியவந்தது. தற்போது அவர் நலமாக உள்ளார். 

கிணற்றுக்குள் விழுந்த பூனையை மீட்கும் முயற்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 



கருத்துரையிடுக

0 கருத்துகள்