ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிகவும் பிரபலமான போண்டி சந்திப்பில் உள்ள வெஸ்ட்பீல்ட் வணிக வளாகம் எப்போதும் மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக இருக்கும். இன்று (சனிக்கிழமை) பிற்பகல் ஆஸ்பத்திரேலியா நேரப்படி மாலை 4 மணியளவில் வாலிபர் ஒருவர் கத்தியுடன் வணிக வளாகத்திற்குள் நுழைந்தான்.
திடீரென அவன் அங்கிருந்த வர்களை விரட்டி, விரட்டி கத்தியால் குத்தினான்.இந்த கொடூரமான கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர். ஒரு சிறு குழந்தை உட்பட பலர் காயமடைந்தனர் .
தகவல் அறிந்து வந்த போலீசார் வணிக வளாகத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர். அவர்கள் கொலையாளியை சுட்டு கொன்றனர்.
தீவிர வாதிகள் தாக்குதல் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்துகள்