Breaking News

6/recent/ticker-posts

வேன் கவிழ்ந்து 6 பள்ளிக்குழந்தைகள் பலி

அரியானா மாநிலம் மகேந்தர்கர் மாவட்டத்தின் உன்ஹானி கிராமத்தில் இன்று காலை 30 தனியார் பள்ளிக்குழந்தைகளுடன் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பள்ளிக்குழந்தைகள் பலியானார்கள். மேலும் 2 பேரின் நிலைமை  மோசமாக உள்ளது. 15 குழந்தைகள் படுகாயம் அடைந்து உள்ளனர். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

காயமடைந்த மாணவர்கள் மஹேந்தர்கர் மற்றும் நர்னாலில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பள்ளி வேனின் தகுதி சான்றிதழ் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு  காலாவதியாகிவிட்டது. பள்ளி வேனின் தகுதி புதுப்பிக்கப்படவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். மேலும் பள்ளி வேனின் டிரைவர் மது போதையில் இருந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

விபத்து குறித்து கனினா டிஎஸ்பி மொஹிந்தர் சிங் கூறும்போது, "பள்ளி வேனை டிரைவர் அதிவேகமாக ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து உள்ளது. ரம்ஜான் விடுமுறை நாளில் பள்ளி ஏன் திறக்கப்பட்டது என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. மேலும்  டிரைவர் குடிபோதையில் இருந்தாரா என்பதை அறிய அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்"என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்