ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விசாகப்பட்டினத்தில் இன்று நடந்த போட்டியில் டெல்லி-சென்னை அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்கள் குவித்தது. ரிஷப் பண்ட் 51 ரன்கள்,வார்னர் 52 ரன்கள் எடுத்தனர்.
இதை தொடர்ந்து விளையாடிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ரச்சின் ரவீந்திரா 2 ரன்களும்,கெய்க்வாட் 1 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.
இதன் பின்னர் ரகானே நிலைத்து நின்று ஆடி 45 ரன்கள் குவித்தார் கடைசி கட்டத்தில் 4 ஓவர்களில் 72 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது டோனியும், ஐடோஜாவும் ஜோடி சேர்ந்தனர்.இந்த ஜோடி பந்துகளை நாளாபுறமும் சிதறடித்தனர்.
குறிப்பாக டோனி சிக்சர்கள் பவுண்டரிகள் விளாசினார். இந்த சீசன் ஐபிஎல் கிரிக்கெட்டில் டோனி தனது முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
டோனி மைதானத்தில் இறங்கும்போது ரசிகர்கள் ஆரவாரம் வின்னை பிளந்தது. இது போல் அவர் சிக்சர்கள் பவுண்டரிகள் விளாசிய போதும் ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.
கடைசி ஓவரில் டோனி 2 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் அடித்து 20 ரன்கள் குவித்தார். அவர் மொத்தம் 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 3 சிக்சர்கள்,4 பவுண்டரிகள் விளாசி இருந்தார். ஆனால் ஷிவம்துபே 17 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அடைந்தார். இதில் ஒரு பவுண்டரி மட்டும் அடங்கும்
20 ஓவர்கள் முடிவில்சென்னை அணி டெல்லியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது . மொத்தம் 171 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
சென்னை அணி தோற்றாலும் டோனியின் அதிரடி ஆட்டத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
0 கருத்துகள்