ந்தேதி நடக்கிறது. தேர்தல் நெறுங்கி உள்ளதால் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. பா.ஜனதா தலைவர்கள் தமிழகத்தை முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பிரதமர் மோடி ஏற்கனவே 5 முறை தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார் கடந்த 2 நாட்களாக பா.ஜனதா தேசிய தலைவர் நட்டா, மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் இன்று மீண்டும் பிரதமர் மோடி சென்னை வந்தார். அவர் 2 நாட்கள் பயணமாக வந்து உள்ளார்.
இன்று மாலை பிரதமர் மோடி தி.நகரில் ரோடு ஷோ நடத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இதில் பிரதமர் மோடி தமிழக பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்து வந்திருந்தார். தி.நகர் பனகல் பார்க் அருகில் தொடங்கிய ரோடு ஷோ தேனாம்பேட்டையில் முடிவடைந்தது. இந்த ரோடு ஷோவில் பிரதமர் வந்த வாகனத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன்,மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் செல்வம், வட சென்னை வேட்பாளர் பால்கனகராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மோடியை வரவேற்க சாலையின் இரு புறமும் ஏராளமான தொண்டர்கள் கூடி இருந்தனர். அவர்களை பார்த்து பிரதமர் மோடி உற்சாகத்துடன் தாமரை சின்னத்தைக் காட்டி ஆதரவு திரட்டியபடி சென்றார். பா.ஜ., தொண்டர்ககள் பூக்களை தூவி மோடியை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
0 கருத்துகள்