இதையடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியில் ஹெட் 21 ரன்களும், அபிஷேக் ஷர்மா 16 ரன்களும், மார்க்ரம் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.
இதன் பின்னர் களமிறங்கிய நிதிஷ் ரெட்டி அதிரடியாக விளையாடி 64 ரன்கள் குவித்தார்.இதனால் ஹைதராபாத்தின் ரன் வேகம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது கடைசி கட்டத்தில் அப்துல் சமத் 12 பந்துகளில் 25 ரன்கள் விளாசினார். இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டும்,ஷாம் கரண், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட் டும், ரபடா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. ஆரம்பத்திலேயே பேர்ஸ்டோ ரன் எதுவும் எடுக்காமல் கம்மின்ஸ் பந்தில் போல்ட் ஆனார்.இதன் பின்னர் ஷிகர்தவான் 14 ரன்கள், ஷாம் கரண் 29 ரன்கள், சிக்கந்தர் ராசா 28 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால் பஞ்சாப் அணியின் ரன் வேகம் குறைந்து கடைசி 5 ஓவர்களில் 78 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டதால்வெற்றி வாய்ப்பு மங்கியது.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கடந்த ஆட்டத்தில் அதிரடி காட்டிய ஷஷாங்சிங் -அஷுதோஷ் ஷர்மாஆகியோர் சிக்ஸர், பவுண்டரி களாக விளாசினர். இதனால் பஞ்சாப் அணியின் ரன் வேகம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.
கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டது.கடைசி ஓவரை உனட்கட் வீசினார்.முதல் பந்தை அஷுதோஷ் ஷர்மா சிக்சருக்கு விரட்டினார்.பின்னர் 2 பந்துகளும் வைடாக வீசப்பட்டது . ஓவரின் 2-வது பந்தில் சிக்சர்,3-வது பந்தில் இரண்டு ரன்களும் எடுக்கப்பட்டது. இதன் காரணமாக கடைசி 3 பந்துகளில் 13 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
4-வது பந்தில் இரண்டு ரன்களும், அதற்கு அடுத்த பந்து வைடாகவும் வீசப்பட்டது .5-வது பந்தில் அஷுதோஷ் ஷர்மா 1 ரன் மட்டுமே எடுத்தார். கடைசி பந்தில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ன நிலை வந்ததால் பஞ்சாப் அணியின் வெற்றி தகர்ந்தது. கடைசிப் பந்தை எதிர் கொண்ட ஷஷாங்சிங் சிக்சர் அடித்தார்.
இதனால் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன் பின்னரே ஹைதராபாத் அணி வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். கடைசி நேரத்தில் ஷஷாங்சிங் -அஷுதோசின் அதிரடியான ஆட்டத்தால் ஹைதராபாத் அணிக்கு பஞ்சாப் மரண பயத்தை காட்டியது.
0 கருத்துகள்