Breaking News

6/recent/ticker-posts

கிளர்ச்சியில் இருந்து உருவானது ஆம்ஆத்மி..பயப்படமாட்டோம் சிறையில் இருந்து வெளியேவந்த சஞ்சய்சிங் எம்.பி ஆவேசம்

டில்லி,ஏப்.3-
டெல்லியில் மதுக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் இருந்த அவர் 6 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார்.
இன்று இரவு  அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை ஆம்ஆத்மி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். 

அப்போது ஒரு வாகனத்தின் மேல் நின்றபடி பேசிய சஞ்சய் சிங், இது கொண்டாட்டத்திற்கான நேரம் இல்லை. போராட்டத்திற்கான நேரம். அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.சிறையில் உள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று ஆவேசமாக பேசினார்.
இதைத்தொடர்ந்து சஞ்சய் சிங் முதலாவதாக அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்றார். அங்கு கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் சுனிதாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். பின்னர் அவர் ஆம் ஆத்மி அலுவலகத்திற்குச் சென்று தொண்டர்களிடம் பேசினார். அப்போது ஆம்ஆத்மி கிளர்ச்சியில் இருந்து உருவான கட்சி. யாருக்கும் பயப்படாது என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்