Breaking News

6/recent/ticker-posts

தைவானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை

தைவானில் உள்ள கிழக்கு கடற்கரையில் இன்று காலை 5.28 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானது. 10 கி.மீட்டர்  ஆழத்தில் இது ஏற்பட்டு இருக்கிறது. இதனால் வீடுகள் குலுங்கின. 

ஹுவாலியன் நகரத்தில் பல மாடி கட்டிடங்கள் அப்படியே சரிந்தன. இதேபோல் பல இடங்களில் நிலநடுக்கத்தால் பலத்த சேதம் அடைந்து உள்ளன. தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பான், பிலிப்பைன்சில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.



சேத விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.






கருத்துரையிடுக

0 கருத்துகள்