தமிழ அரசுக்கும், மத்திய அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. கவர்னர் ரவியும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டைபோட்டு வருகிறார்.
இந்த நலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜனதாக கட்சி கையில் எடுத்து உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க.மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் கடுமையான குற்றசாட்டுகளை வைத்து உள்ளது. பிரதமர்மோடி மற்றும் மத்தியமந்திரிகள் நிர்மலா சீத்தாராமன், அமித்ஷா, ஜெய்சங்கர் ஆகியோர் கடும் விமர்சனம்செய்து வருகின்றனர். இதற்கு தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளும் பதிலடி கொடுத்து வருகிறது.இதற்கடையே வெள்ள நிவாரணம் வழங்காதது தொடர்பாக தி.மு.க. தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வெள்ள நிவாரணத்திற்காக உடனடியாக ரூ-.900 கோடி வழங்கப்பட்டது. மேலும்வெள்ள தடுப்பு சிறப்புநிவாரணத்தொகை ரூ.5 ஆயிரம்கோடி வழங்கினோம். அதில் பணிகள் முறையாக நடைபெறவில்லை. அந்த பணிகள் நடந்து இருந்தால் சென்னையில் வெள்ளப்பாதிப்பு நடந்து இருக்காது எனவும், செய்யப்பட்ட பணிகளுக்கான விபரங்களை அளிக்கவும் கேட்டார். ஏற்கனவே வெள்ள நிவாரணம் வழங்காத மத்திய அரசுக்கு எதிராக சுப்ரரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் வேலூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தேர்தல் வந்தால் மட்டும் வருபவர்கள் நாங்கள்அல்ல.தேர்தல் வந்தால் மட்டும் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.வெள்ளம் வந்தால் பிரதமர் வர மாட்டார், நிதி கேட்டால் தர மாட்டார்.தமிழகத்துக்கு வெள்ள நிவாரணம் தராத மத்திய அரசை எதிர்த்து நாளை காலை சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.மாநில அரசின் நிதி, நீதி பெற் கோர்ட்டின் கதவை தட்ட வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலை மாறவேண்டும்.
கச்சத்தீவு விவகாரத்தில் தேன் கூட்டில் கை வைத்தது போல் மாட்டிக்கொண்டு தவிக்கிறது பா.ஜ.க!.இந்த பத்தாண்டு காலத்தில் பிரதமர் மோடி எத்தனை முறை இலங்கைக்கு பயணம் செய்தார். அப்போதெல்லாம் கச்சத்தீவை திரும்ப கேட்டிருக்கிறாரா?இலங்கை அதிபரை சந்தித்த போது கச்சத்தீவு இந்தியாவுக்குதான் சொந்தம் என சொல்லியிருக்கிறாரா? அப்போதெல்லாம் கச்சத்தீவு மோடியோட ஞாயபகத்திற்கு வரவில்லை.
நேரு, இந்திரா காலத்தில் நடந்தது எல்லாம் ஞயாபகத்துக்கு வரும் பிரதமர் மோடிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும், மீனவர்கள் உரிமையை பாதுகாக்க வேண்டும் என நான் வைத்த கோரிக்கை ஞாயபகம் இருக்கிறதா?
2015-ம் ஆண்டு ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை செயலாளாராக இருந்த போது கொடுத்த தகவலில் கச்சத்ததீவு எப்போது இந்தியாவின் பகுதியாக இருந்தது இல்லை என்றார். ஆனால் இப்போது அவரே விருப்பத்திற்கு ஏற்றார்போல் தகவலை மாற்றி கொடுக்கிறார். ஏன் இந்த அந்தல் பல்டி?
இவ்வாறு அவர் பேசினார்.
0 கருத்துகள்