Breaking News

6/recent/ticker-posts

சிட்னி தேவாலயத்தில் பலரை கத்தியால் குத்திய வாலிபர்

ஆஸ்திரேலியா, சிட்னி நகரின்  மேற்கு பகுதியில் உள்ள வேக்லி, வெல்கம் தெருவில் குட் ஷெப்பர்ட் தேவாலயம் உள்ளது. இங்கு ஆஸ்திரேலியா நேரப்படி இன்று(15&ந்தேதி) இரவு 7.10 மணியளவில் வழக்கமான சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது தேவாலயத்தில் இருந்த வாலிபர் ஒருவர் திடீரென கத்தியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக குத்தினான். முன்னால் நின்று பிரார்த்தனையில் ஈடுபட்ட பிஷப்பையும் கத்தியால் குத்தி வெறியாட்டம் ஆடினான்.
 இதனால் அதிர்ச்சி அடைந்த தேவாலயத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்ததும் நியூ சவுத்வேல்ஸ் பாலீசார் விரைந்து வந்து கத்தியுடன் விரட்டிய வாலிபரை மடக்கிபிடித்தனர். அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இந்த கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயம் அடைந்து இருப்பதாகவும், அனைவரது நிலைமையும் நன்றாக இருப்பதாகவும் போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிட்னி நகரில் உள்ள ஷாப்பிங் மாலில் புகுந்த வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் சுட்டு கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்