ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் இன்று மும்பை-ராஜஸ்தான் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஆரம்பமே மும்பை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் 5-வது பந்தில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரோகித்சர்மான ரன் எதுவும் எடுக்காமல் சஞ்சுசாம்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.அவர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.
இதையடுத்து வந்த நமன் திர்ரும் சந்தித்த முதல் பந்திலேயே எல்.பி.டவுள்.யூ முறையில் போல்ட் வெளியேற்றினார். இதனால் மும்பை அணி முதல் ஓவரிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு ஒரு ரன் மட்டுமே எடுத்து இருந்தது. இதைத்தொடர்ந்து ஆட்டத்தின்3-வது ஓவரை போல்ட் மீண்டும் வீச வந்தபோது 2-வது பந்தில் பிரீவ்ஸ்-யையும் அவர் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேற்றினார்.பிரீவ்ஸ், பர்கரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். 3 பேர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானதால் மும்பை அணி ரன் எடுக்க முடியாமல் திணறியது. திலக் வர்மாவும், கேப்டன் ஹார்த்திக் பாண்டாவும் அதிரடி காட்டி அணியை மீட்க போராடினர். மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன் மட்டுமே எடுத்து இருந்தது.
இந்த போட்டியில் டக் அவுட் ஆனதால் ரோகிச் சர்மா ஐ.பி.எல். போட்டியில் அதிக முறை அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை படைத்து உள்ளார். அவர் மொத்தம் 17 முறை ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி இருக்கிறார். இதேபோல் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும் 17 முறை ரன் எடுக்காமல் அவுட் ஆகி உள்ளார். இதற்கு அடுத்த இடங்களில் மேக்ஸ்வெல், பியூஸ்சாவ்லா, மந்தீப்சிங், சுனில்நரைன் ஆகியோர் தலா 15 முறையும் டக் அவுட் ஆகி மோசமான சாதனை பட்டியலில் உள்ளனர்.
ரோகித் சர்மாக அதிக ரன்கள் எடுத்து சாதனை படைத்து இருந்தாலும் ஐ.பி.எல்.லில் அதிக முறை டக் அவுட் ஆன சாதனை அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
0 கருத்துகள்