Breaking News

6/recent/ticker-posts

சரப்ஜித் சிங் கொலையில் தொடர்புடைய தீவிரவாதி லாகூரில் சுட்டுக்கொலை

 

பாகிஸ்தான் சிறையில் இருந்த இந்திய கைதி சரப்ஜித் சிங் (49).லாகூர் சிறையில் இருந்த அவரை  சககைதிகள்  இரும்பு கம்பி, செங்கலால் கொடூரமாக தாக்கியதில்  கடந்த 2013 ஆம் ஆண்டு மே 2 -ந்தேதி  இறந்தார் .அவர் சுமார் ஒரு வாரம் கோமா நிலையில் இருந்து மரணம் அடைந்தார்.

தவறுதலாக எல்லை தாண்டி சென்ற சரப்ஜித் சிங்கை பாகிஸ்தான் போலீசார் கைது செய்து பின்னர் 14 பேரை பலி வாங்கிய பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாகக் கூறினர். இதில்  சரப்ஜித் சிங்குக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பின்னர் சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க பட்டு இருந்தது.

 சரப்ஜித் சிங் கொலை வழக்கில் அப்போது  சிறையில் இருந்த லஷ்கர்-இ -தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளியான அமீர் சர்பராஸ் தம்பா உள்ளிட்டோர்  மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை லாகூரில் உள்ள இஸ்லாம்புரா பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென அங்கு இருந்த அமீர் சர்பராஸ் தம்பா மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.இதில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அவனை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அமீர் சர்பராஸ் தம்பா இறந்தான்.

இந்திய கைதி சரப்ஜித் சிங் கொலை வழக்கில் தொடர்புடைய  தீவிரவாதி லாகூரில் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அமீர் சர்பராஸ் தம்பா 1979-ம் ஆண்டு லாகூரில் பிறந்தவன்.அவன் லஷ்கர் இதொய்பா  நிறுவனரின் நெருங்கிய கூட்டாளியாக வலம் வந்தான். சமீபகாலமாக இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட தீவிரவாத குழுக்களை சேர்ந்தவர்கள் அவர்களது நாட்டிலேயே மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


 

கருத்துரையிடுக

0 கருத்துகள்