Breaking News

6/recent/ticker-posts

மாநிலங்களவை எம்.பி.ஆக சோனியா காந்தி பதவி ஏற்றார்


காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சோனியா காந்தி கடந்த 2004-ம் ஆண்டு முதல் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தார். தற்போது உடல்நிலை காரணமாக இந்த முறை அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. 

இதைத்தொடர்ந்து அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து முதல் முறையாக மாநிலங்களவை எம்.பி.ஆக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இன்று அவர் மாநிலங்களவை எம்.பி.ஆக பதிவி ஏற்றார். அவருக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

சோனியா காந்தி முதன்முறையாக கடந்த 1999-ல் கர்நாடகாவின் பெல்லாரி மற்றும் உத்திரபிரதேசமாநிலம் அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் பெல்லாரி எம்.பி. பதவியை ராஜினாமா செய்த அவர் அமேதி எம்.பி. பதவியில் தொடர்ந்தார்.

2004 தேர்தலில் முதன்முதலாகக் களம் இறங்கிய தனது மகன் ராகுல் காந்திக்காக அவர் அமேதியை விட்டுக் கொடுத்தார். பிறகு அருகில் உள்ள மற்றொரு காங்கிரஸ் செல்வாக்குமிக்க ரேபரேலிக்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்