Breaking News

6/recent/ticker-posts

குஜராத்துக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று குஜராத்-பஞ்சாப் அணிகள் மோதின. அகமதாபாத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி  பவுலிங்கை தேர்வு செய்தது.

 முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 199 ரன்கள் குவித்தது.கேப்டன் சுப்மன் கில் அவுட் ஆகாமல் 48 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார்.

ரபாடா 2 விக்கெட்டும், ஹர்பிரீத் பிரார் ஹர்ஷல்பட்டேல் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதன் பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.

 தவான் ஒரு ரன்னும்  பேர்ஸ்டோ 22 ரன்னிலும்,சாம் கரண் 5 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனால் பஞ்சாப் அணி ஒரு கட்டத்தில் வெற்றி பெறுமா? என்ற கேள்வி எழுந்தது.

இதன் பின்னர்  இறங்கிய ஷஷாங்சிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ரன் மளமளவென உயர்ந்தது .இதே போல் அசுதோஷ் சர்மா தனது பங்கிற்கு வெளுத்து வாங்கினார். இதனால் பஞ்சாப் அணியின் ரன் வேகம் அதிகரித்தது. 

19-வது ஓவரில் 18 ரன்கள் குவித்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.கடைசி ஓவரில் பஞ்சாப் அணிக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கடைசி ஓவரை தர்ஷன் வீசினார் முதல் பந்தில்  அசுதோஷ் சர்மா கேட்ச் ஆகி அவுட் ஆனதால் ரசிகர்களிடையே டென்ஷன் எகிறியது.

 ஷஷாங்சிங் 4-வது பந்தில் பவுண்டரி அடித்ததால் ஆட்டத்தின் பரபரப்பு முடிவுக்கு வந்தது.முடிவில் 19.5 வது ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது. அதிரடி காட்டிய ஷஷாங்சிங் 61 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார் அசுதோஷ் சர்மா 31 ரன்கள் எடுத்து இருந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்