Breaking News

6/recent/ticker-posts

தமிழகத்தில் நாளை வெப்ப அலை வீசும்-வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் இரவு நேரங்களில் கடும் புழுக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். மின்விசிறிகளில் இருந்து அனல் காற்று வீசுகிறது. இதனால் பல வீடுகளில் தற்போது புதிதாக ஏ.சி., ஏர் கூலர் எந்திரங்களை வாங்கி வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்து வருகிறார்கள். இந்த நிலையில் நாளை வடதமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்து உள்ளது. மேலும் 8&ந்தேதி முதல் 10&ந்தேதி வைர வெப்பநிலை பொதுவாக தமிழகத்தில் 2&3டிகிரி செல்சியஸ் இல்பைவிட அதிகமாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் கருர் பரமத்தியில் அதிகபட்சமாக 106.7 டிகிரி பதிவாகி இருக்கிறது. இதேபோல் ஈரோடு, சேலத்தில் 106.16 டிகிரியும், தருமபுரியில் 105.8டிகிரியும், மதுரை, நாமக்கல், திருப்பத்தூர், திருச்சி மற்றும் வேலூரில் 104 டிகிரியும் வெயில் கொளுத்தி இருக்கிறது.
இதுகுறித்து வானிலை மையம் கூறும்போது, கோவை, தர்மபுரி, ஈரோடு, கருர், மதுரை சேலம், திருப்பத்தூர்,  நீலகிரியில் இயல்பைவிட மிக அதிகமாக 3.1 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிரித்து உள்ளது. இதேபோல் தஞ்சாவூர், கடலூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், திருச்சி, திருவள்ளுர், வேலூர் மாவட்டங்களில் அதிகமாக 1.6 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்று கூறி உள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்