Breaking News

6/recent/ticker-posts

மோடியின் அரசு போக வேண்டிய நேரம் இது- ராகுல்காந்தி


  கோவையில் காங்கிரஸ்-தி.மு.க.கூட்டணி கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ்தலைவர் ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் பேசினர். கூட்டத்தில் திரளான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது ராகுல்காந்தி பேசியதாவது:-
எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள விரும்புகிறேனோ, அப்போதெல்லாம் நான் தமிழ்நாட்டை பார்க்கிறேன்.அதனுடைய கலாச்சாரம், தொன்மையான பண்பாடு, தமிழர்களின் சரித்திரத்தை படித்த காரணத்தால் இந்தியாவை பிரதிபலிக்கின்ற அற்புத கண்ணாடியாக நான் தமிழ்நாட்டை பார்க்கிறேன்.
சமூக நீதியின் பாதையில் எப்படி நடப்பது என்பதை இந்த நாட்டுக்கே தமிழ்நாட்டு மக்கள்தான் தெரியப்படுத்தியுள்ளீர்கள். அதனால்தான், தமிழ்நாட்டில் இருந்து இந்திய ஒற்றுமைக்கான யாத்திரையை தொடங்கினேன்.
சமூக நீதியைப் பொறுத்தவரை முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவாகக் கூறியுள்ளார்.எனது மூத்த சகோதரர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்வு தேவையா இல்லையா என்பதை தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கே விடப் போகிறோம். 


தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற பல நிறுவனங்கள் மிரட்டப்பட்டன. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாலேயே அது குறித்த விபரங்கள் வெளியாகின
ஏழை மக்களுக்காக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க. எதுவும் செய்யவில்லை.
 பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் ஆகியோர் வெறும் அரசியல் தலைவர்கள் அல்ல. மக்களின் குரலாக இருந்ததால், அவர்கள் பேசியதை உலகமே கேட்டது. ஏன் தமிழ் மொழி மீது, தமிழ் வரலாற்றின் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள்? என மக்கள் மோடியை நோக்கி கேட்கிறீர்கள். தமிழ்நாட்டுக்கு வந்து தோசை பிடிக்கும் என கூறிவிட்டு, டெல்லிக்கு சென்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தலைவன் என பேசுகிறீர்கள்.
நாடாளுமன்றத்தில் அதானி எப்படியெல்லாம் இந்த அரசில் சலுகைகளை பெறுகிறார் என பேசியதும், சில வாரங்களில் எனது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. என் அரசு இல்லமும் பறிக்கப்பட்டது. உண்மையிலேயே எனக்கு அந்த வீடு தேவையில்லை, லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் எனக்காக அவர்களின் வீடுகளை திறந்து வைப்பார்கள். 

மோடியின் அரசு போக வேண்டிய நேரம் இது. மோடியின் அரசு என நான் சொன்னாலும், இது அதானியின் அரசு. அதானிக்காகவே எல்லாமே செய்கிறார் மோடி. சாலை, உள்கட்டமைப்பு, விமான நிலையம் என எதை அவர் விரும்புகிறாரோ, அதை மோடி கொடுத்துவிடுவார்
ஏன் ‘ஒரே நாடு ஒரே மொழி’ என ஒரு மொழிக்காக எப்போதும் பேசுகிறீர்கள்.  தமிழ், பெங்காலி, கன்னடா, மணிப்பூரி ஆகிய மொழிகளுக்கெல்லாம் ஏன் நீங்கள் பேசக் கூடாது?
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் சாதிவாரி, பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படும்சாலை, விமான நிலையம் உள்ளிட்ட அனைத்தையும் அதானிக்கு கொடுக்கிறார் பிரதமர் மோடி.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.


 




கருத்துரையிடுக

0 கருத்துகள்