எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்த மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம் வீரப்பன்(98).எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனர் ஆவார்.
ஆர்.எம்.வீரப்பன் வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இன்று மதியம் 2 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆர்.எம்.வீரப்பன், திரைப்பட தயாரிப்பாளர் ஆகவும் இருந்து உள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர்,தனது 98-வது வயது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்