Breaking News

6/recent/ticker-posts

மும்பை அணி வீரர்களுக்கு சூப்பர்மேன் உடை அணியும் தண்டனை


மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தங்களது வீரர்கள் நேரம் தவறாமை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது. 

ஆனாலும் சில வீரர்கள் தங்களது டீம் மீட்டிங்கிற்கு தாமதமாக வருவதை வாடிக்கையாக வைத்து இருந்தனர்.

இதையடுத்து டீம் மீட்டிங்கிற்ககு தாமதமாக வரும் வீரர்களுக்கு தண்டனையாக இந்த சூப்பர் மேன் உடையை அணிந்து வர வேண்டும் என்ற வேடிக்கையான விதியை கொண்டுவந்து உள்ளது. அதன்படி சமீபத்திய நடந்த டீம் மீட்டிங்குக்கு தாமதமாக வந்த இஷான் கிஷன், குமார் கார்த்திகேயா, நுவான் துஷாரா உள்ளிட்ட வீரர்களை சூப்பர் மேன் உடையை அணிய வைத்துள்ளது.

அவர்கள் அந்த உடையில் ஓட்டல் அறையில் இருந்து விமானத்தில் பயணம் செய்ய வந்தனர்.

இஷான் கிஷன் சூப்பர் மேன் உடையை அணிந்து வரும் கலகலப்பான காட்சியை தங்களது சமூகவலைதளங்களில் மும்பை அணி பதிவேற்றி உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்