Breaking News

6/recent/ticker-posts

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வீராட்கோலி சதம்

ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் இன்று ராஜஸ்தான்- பெங்களூர் அணிகள் மோதின. டாஸ்வென்ற ராஜஸ்தான் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து விளையாடி பெங்களூர் அணியின் வீராட் கோலி-டூப்ளிசிஸ் ஜோடி பந்துகளை நாலாபுறவும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். 

வீராட் கோலி அபாரமாக விளையாடி ஆட்டம் இலக்காமல் 113 ரன்கள் குவித்தார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் அடிக்கப்பட்ட முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 72 பந்துகளில் 4 சிக்சர்கள், 12 பவுண்டரி அடித்து இருந்தார்.

 டூப்ளிசிஸ் 44 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மேக்ஸ்வெல் வழக்கம் போல் ஏமாற்றம் அளித்தார். அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்து பர்கர் பந்தில் போல்டு ஆனார். முடிவில் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. யுவேந்திர சாஹல் 2 விக்கெட் எடுத்து இருந்தார். இதைத்தொடர்ந்து 184 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணிவிளையாடி வருகிறது.


 

கருத்துரையிடுக

0 கருத்துகள்