பிரபசினிமா பட நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் குடும்பத்துடன் விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீடடில் வசிக்கும் ஸ்ரீ தேவி என்பவருக்கும் காரை நிறுத்துவதில் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று மாலை ஸ்ரீ தேவியின் வீட்டின் அருகே நடிகை சரண்யாபொன்வண்ணன் தனது காரை நிறுத்தி இருந்தார்.அப்போது ஆஸ்பத்திரிக்கு செல்ல ஸ்ரீ தேவி தனது காரை எடுப்பதற்காக வீட்டின் கதவை திறந்தார். இதில் இரும்பு கேட் அருகே நிறுத்தப்பட்டு இருந்த சரண்யாபொன்வண்ணனின் கார் மீது லேசாக உரசியது.
இதனால் ஆத்திரம் அடைந்த சரண்யாபொன்வண்ணன், ஸ்ரீ தேவியின் வீட்டிற்குள் சென்று தகராறில் ஈடுபட்டு மிரட்டி உள்ளார். இதுகுறித்து ஸ்ரீதேவி விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இருதரப்பினரிடமும் விசாரித்து வருகிறார்கள்.
0 கருத்துகள்