இதை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம்டூபே 45 ரன்கள் எடுத்தார். ரகானே 35 ரன்னும்,ஜடோஜா 31 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள்.
இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களம் இறங்கியது. ஆரம்பம் முதலே அந்த அணி அதிரடியாக விளையாடியது. இதனால் பவர் பிளேயில் ஐதராபாத் அணி 78 ரன்கள் குவித்தது. மார்க்ரம் 36 பந்தில் 50 ரன்கள், அபிஷேக் ஷர்மா 12 பந்துகளில் 37 ரன்னும் டிராவிஸ்கெட் 24 பந்தில் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் ஐதராபாத் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. மொயின்அலி 2 விக்கெட் எடுத்தார் சென்னை அணிக்கு இது தொடர்ச்சியான 2-வது தோல்வி ஆகும்.
0 கருத்துகள்