ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று கொல்கத்தாவும் சென்னை அணிகளும் மோதின சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதை எடுத்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தேஷ் பாண்டே வீசிய ஆட்டத்தின் முதல் ஓவர் முதல் பந்தில் சால்ட் ரன் எதுவும் எடுக்காமல் ரவீந்திர ஜடோஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதன் பின்னர் கொல்கத்தா வீரர்கள் யாரும் அதிரடியாக ஆடவில்லை. இதனால் அந்த அணியின் ரன் வேகம் மிகவும் குறைந்தது. கடைசி கட்டத்தில் ரசஸ்சலும் அதிரடி காட்ட முடியாமல் தினறினார்.இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் பட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்னும் ரகுவன்ஷி 24 ரன், சுனில் நரைன் 27 ரன் எடுத்தனர். பவுலிங், பீல்டிங்கில் சென்னை அணி மிரட்டியது .
தேஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட் எடுத்தனர் .முஸ்தபிஜுர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் கெய்க்வாட் அதிரடியாக ஆடினார். அவர் ஆட்டமிழக்காமல் 58 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். ரச்சின் ரவீந்திரா 15 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
இதையடுத்து களம் இறங்கிய மிக்சல் 25 ரன்களும்,ஷிவம்டூபே 28 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். ஆட்டத்தின் கடைசியில் தோனி களம் இறங்கி ஒரு ரன் எடுத்தார். முடிவில் சென்னை அணி 17.4 ஓவரில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
முன்னதாக தோனி பேட்டிங் செய்ய இறங்குவதற்கு முன்பு ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்வதற்கு தயாராகி நடக்க முயன்றார். இதற்குள் டோனி பேட்டிங் செய்ய வருவதை கண்ட அவர் சில அடி தூரம் நடந்து விட்டு திரும்பி வந்தார். இதனால் பெவிலியனில் இருந்த சென்னை அணி வீரர்களிடையே சிரிப்பலை எழுந்தது. அப்போது சென்னை அணி வெற்றி பெற 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.டோனி சென்னை மைதானத்தில் களம் இறங்கியதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
0 கருத்துகள்