மெக்சிகோவில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது. |
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியனை சந்திரன் மறைப்பதால் கிரகணம் நிகழ்கிறது. இந்த ஆண்டு, முதல் சூரிய கிரகணம் இன்று ஏற்பட்டது.
இந்தியா உள்பட பெரும்பாலான ஆசிய நாடுகளில் இந்த கிரகணத்தை பார்க்க முடிய வில்லை. ஆனால்அமெரிக்கா, கனடா, மெக்சிகோ மற்றும் வட அமெரிக்க நாடுகளில் சூரிய கிரணக்கத்தை மக்கள் முழுமையாக கண்டு ரசித்தனர்.
அமெரிக்க நேரப்படி மதியம் 1.59 மணிக்கு தொடங்கி பின்னர் பிற்பகல் 3.20 மணிக்கு கிரகணம் முழுவதும் ஆரம்பமானது. இது இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு தொடங்கி முழு கிரகணமாக 10.08 மணிக்கு வந்தது.
பிறகு கிரகணம் அதிகாலை 1.25 மணிக்கு முடிகிறது. இந்த கிரகணம் சுமார் 4 மணி 31 நிமிடங்கள் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்