உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் ரெயில் நிலையத்திலிருந்து வழக்கம் போல் கவுகாத்தி-பிகானேர் எக்ஸ்பிரஸ் ரயில்(எண்:15634) புறப்பட்டு சென்றது. ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் நடைமேடையில் நின்ற ஆண் ஒருவர் அவசரமாக ரயில் பெட்டியில் ஓடிச் சென்று ஏற முயன்றார்.
ரெயில் பெட்டியின் வாசல் கம்பியை பிடித்த அவரால் உள்ளே ஏற முடியவில்லை.இதில் நிலை தடுமாறிய அவர் ரெயில் பெட்டிக்கும் நடை மேடைக்கும் இடையே சிக்கி கீழே சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நடைமேடையில் பாதுகாப்பு பணியில் இருந்த சப்- இன்ஸ்பெக்டர் சஞ்சய் குமார் ராவத் என்பவர் உடனடியாக செயல்பட்டு ரயில் சிக்கிய அந்த நபரை கீழே இழுத்தார். இதில் அந்த பணியும் சப் இன்ஸ்பெக்டரும் நடைமேடையிலேயே ஓடும் ரெயிலை விட்டு விலகி விழுந்தனர். அதிர்ஷ்டவசமாக அந்த பயணி ரெயிலில் சிக்காமல் உயிர் தப்பினார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயிலில் சிக்கிய பயணியை வெளியே இழுத்து அவரது உயிரைக் காப்பாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் குமார் ராவத்தை எங்கிருந்த பயணிகளும் ரெயில்வே அதிகாரிகளும் வெகுவாக பாராட்டினர்.
விசாரணையில் ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய பயணி ஜெய்ப்பூரை சேர்ந்த சஜ்ஜன் சிங்(63) என்பது தெரிந்தது. அவர் மதிய உணவு வாங்குவதற்காக ரெயிலில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.அவர் கடையில் இருந்து திரும்பி வருவதற்குள் ரெயில் புறப்பட்டதால் அவசரமாக ஓடும் ரெயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்தது தெரிய வந்தது.
சப் இன்ஸ்பெக்டர் சஞ்சய் குமார் ராவத் பயணியை காப்பாற்றும் கண்காணிப்பு கேமரா காட்சியை வடக்கு ரயில்வே தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சப் இன்ஸ்பெக்டரின் செயலை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
0 கருத்துகள்