டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் முதல்&அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 21&ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கைது என்று குற்றம்சாட்டினர். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால்
கைது செய்யப்பட்டற்கு எதிராக அவரது சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இதில் அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் கைதுக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு பின்னர் நீதிபதிகள் எ தீர்ப்பில், “அமலாக்கத்துறை முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது சட்டவிரோதமானது அல்ல. மேலும் டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்கு வகித்துள்ளார். எனவே கெஜ்ரிவாலின் கைது சரிதான்.
எனவே அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்படுகிறது. கைது செய்வது சரியா தவறா என்பது சட்டத்தால் முடிவு செய்யப்படுகிறது. மாறாக தேர்தல் நேரம் என்பதால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல.
நீதிபதிகள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள், அரசியலுக்கு அல்ல. தீர்ப்புகள் சட்டக் கோட்பாடுகளால் எழுதப்படுகின்றன, அரசியல் சார்புகள் அல்ல. அரசியலில் இருந்து விலகி இருப்பதே நீதித்துறையின் சுதந்திரம். அமலாக்க துறையின் தரப்பில் எந்தவிதமான பழிவாங்கலும் இல்லை.பாராளுமன்ற தேர்தலுக்கு முன் தன்னை கைது செய்தது குறித்து அரவிந்த் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு சரியானது அல்ல. அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்யும் அளவுக்கு அமலாக்கத்துறையிடம் போதிய ஆதாரங்கள் இருந்தன. கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் அவர் ஏற்படுத்திய தாமதம் இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ளவர்களையும் பாதித்தது. அரசியல் பிரச்சினைகளை நீதிமன்றத்தின் முன் கொண்டு வர முடியாது. இது நீதிமன்றத்தின் முன் உள்ள விவகாரம். மத்திய அரசுக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையேயான மோதல் அல்ல. இது அவருக்கும் அமலாக்கத்துறைக்கும் இடையே உள்ள வழக்கு. கோவா தேர்தலுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டில் போதிய ஆவணங்கள், ஒப்புதல் அளித்தவர்களின் வாக்குமுலங்களை அமலாக்கத்துறை அளித்து உள்ளது.
இவ்வாறு நீதிபதிகள் கூறிஉள்ளனர்.
0 கருத்துகள்