தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள்,சினிமா நட்சத்திரங்கள் தங்களது ஓட்டை பதிவு செய்தனர்.
காலை 11 மணியளவில் நீலாங்கரையில் உள்ள பள்ளியில் தனது ஜனநாயக கடமையாற்ற நடிகர் விஜய் காரில் வந்தார். அப்போது அங்கே ஏற்கனவே காத்திருந்த ரசிகர்கள் விஜய்யை சூழ்ந்து கொண்டனர். இதனால் விஜய்யால் வாக்குச்சாவடிக்குள் எளிதாக செல்ல முடியவில்லை. பாதுகாப்புக்கு நின்ற போலீசார் நடிகர் விஜய்யை சுற்றி பாதுகாத்தபடி அழைத்துச் சென்றனர். ஒரு கட்டத்தில் விஜய்யால் நடக்க முடியாத அளவுக்கு கடும் நெரிசல் ஏற்பட்டு சிக்கி திணறினார்.
பின்னர் போலீசார் விஜய்யை வாக்குச்சாவடி மையத்துக்குள் அழைத்து சென்றனர்.அங்கு நடிகர் விஜய் தனது ஓட்டை பதிவே செய்து ஜனநாயக கடமை ஆற்றினார்.
இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 கருத்துகள்