நடிகர் விஜய் நடிக்கும் தி கோட் (The Greatest of All Time) திரைப்படம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து உள்ளார். படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரேம்ஜி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இது ரசிகர்களுக்கு ஒரு மிகச்சிறந்த விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்