Breaking News

6/recent/ticker-posts

நிலக்கரி சுரங்கங்களின் உற்பத்தி குறித்து ஆய்வு

 நிலக்கரிஉற்பத்தியில் ஈடுபட்டுள்ள மற்றும் உற்பத்தியை தொடங்க உள்ளமற்றும்செயல்படாமல் உள்ள” சுரங்கங்களின் தற்போதைய நிலை குறித்த ஆய்வுக் கூட்டம், நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு எம் நாகராஜூ தலைமையில் புதுதில்லியில் நடைபெற்றது.


 

நிலக்கரி சுரங்கங்களின் உற்பத்தி நிலை

  இந்த விரிவான ஆய்வுக் கூட்டத்தின்போது,  உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பது என்ற  அரசின் உறுதிப்பாடு குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. மேலும்  நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்றவர்கள், அதிக உற்பத்தி மேற்கொண்டதற்காக பாராட்டு தெரிவித்த திரு நாகராஜூ, 2024-25 நிதியாண்டுக்கான நிலக்கரி உற்பத்தி இலக்கை அடைய உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

2024 ஜூன் 30 நிலவரப்படி, நிலக்கரி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 54 சுரங்கங்களில், 32 சுரங்கங்கள் மின்துறைக்கும், 12 சுரங்கங்கள் முறைப்படுத்தப்படாத துறைகளுக்கும் ஒதுக்கப்பட்டதுடன், 10 சுரங்கங்கள் நிலக்கரியை விற்பனை செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. 

2025- நிதியாண்டில் 11 சுரங்கங்கள் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மகன் திருமணத்துக்கு முன்பு 50 இலவச திருமணம்- அம்பானி குடும்பத்தினர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்